நெல்லை மாநகர் மாவட்ட அதிமுகவில் பெரிய அளவில் நிர்வாக மாற்றம் நடைபெற்றுள்ளது. ஒரு பகுதி செயலாளர் உட்பட 12 வட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பாளை தெற்கு பகுதி செயலாளர் திருத்து சின்னத்துரை உள்ளிட்டோர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த அதிரடி மாற்றத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் செய்துள்ளார்.