மணப்பாறை என்றாலே முறுக்குதான் நினைவுக்கு வரும்; ஆனால் கடந்த பல ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் மணப்பாறை மக்களுக்கு அல்வாவைத் தான் பரிசாகக் கொடுத்துள்ளன எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ கதிரவன் சட்டப்பேரவையில் பேசியுள்ளார். விவசாயம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, குடிநீர், மருத்துவம் மற்றும் கல்வி என அனைத்து அடிப்படைத் தேவைகளுக்காகவும் மணப்பாறை மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.