ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் - மீனா நடிப்பில் உருவான 'திரிஷ்யம் 3' திரைப்படம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆசீர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், முந்தைய இரு பாகங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.