ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் 2013-ல் வெளியான 'திரிஷ்யம்' படம் ரூ.5 கோடி செலவில் ரூ.75 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இது 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது. 2021-ல் வெளியான 'திரிஷ்யம் 2' படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, 'திரிஷ்யம் 3' திரைப்படம் கடந்த 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.