புதுக்கோட்டையில், 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநர் ஆபாவணனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், சிறுமியை மிரட்டிய குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆபாவணனை கைது செய்திருந்தனர்.