சென்னை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் பாலா. இவரது தந்தை ரவி இன்று (நவ., 14) உடல்நலக்குறைவால் சென்னை சேத்துபட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இதையறிந்து அங்கு நேரில் சென்ற உதயநிதி, ரவியின் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு, பாலா உட்பட குடும்பத்தினருக்கு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தார்.