திடீர் நெஞ்சுவலி.. 35 கல்லூரி மாணவிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர் பலி

10090பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டத்தில், கல்லூரி பேருந்து ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழக்கும் நிலையிலும், மாணவிகளின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்புகுளம் பகுதியில் தனியார் கல்லூரி பேருந்தில் மாணவிகளை ஏற்றி வந்த போது ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. செய்வதறியாது தவித்த அவர், உயிர் பிரியும் கடைசி நொடியில் வேகத்தை குறைத்து பேருந்தை ஓரமாக நிறுத்தி 35 கல்லூரி மாணவிகளின் உயிரை காப்பாற்றினார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி