ரஷியாவில் டிரோன் தாக்குதல்: இந்திய ஊழியர் பலி, 3 பேர் காயம்

உக்ரைன்-ரஷியா போரின் ஒரு பகுதியாக, ரஷியாவில் நேற்று இரவு டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இந்தியாவைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர். ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களை தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். உயிரிழந்த இந்திய ஊழியருக்கு தூதரகம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
