'வான்மகள்' திட்டத்தின் கீழ் மகளிருக்கு டிரோன் இயக்க பயிற்சி அளிக்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், 100 மகளிர் உட்பட 500 நபர்களுக்கு டிரோன் இயக்க பயிற்சி உரிமம் வழங்கப்படும். 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் டிரோன்கள் வழங்கப்படும் என கூறினார். வேளாண்மைத்துறையில் உரம், மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.