ஆன்லைன் மூலம் மருத்து விற்பனையை கண்டித்து நாடு முழுவதும் நாளை (மே 20) மருந்துக் கடைகள் அடைப்பு
போராட்டம் நடைபெறவுள்ளது. வலி நிவாரணி, தூக்க மாத்திரைகள் ஆன்லைன் மூலம் வாங்கி இளம் தலைமுறை அடிமையாவதை தடுக்க வேண்டும், உயிர் காக்கும் மருந்துகளின் லாப சதவீதங்கள் மற்றும் தள்ளுபடிகளை கட்டுப்படுத்த வேண்டும், போலி மருந்து விற்பனையை தடுக்க வேண்டும், கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் கலாசார சீரழிவை தடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.