திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்ட பட்டமளிப்பு விழைக்காக கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது கொடைரோடு அருகே பாதுகாப்பு பணியில் இருந்த நிலக்கோட்டை காவல் நிலைய போலீஸ்காரர் அபிமன்யு மது போதையில் தள்ளாடி விழுந்தார். சக போலீசார் அவரை சேரில் அமர வைத்து சமாளித்தனர். இதுகுறித்த வீடியோவாகி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.