சம்பள பிடித்தம், பி.எஃப் மற்றும் இ.எஸ்.ஐ சலுகைகள் மறுக்கப்படுவதை கண்டித்து, வரும் ஜூலை 20-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத
போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த தொடர் போராட்டத்தின் காரணமாக, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு இ-சேவை மற்றும் சேர்க்கை மையங்கள் முற்றிலும் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அன்றைய தினம் இ-சேவை மையங்களின் சேவைகளை பெற இயலாது என்பதால் முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.