தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நடத்தப்படும் இ-சேவை மற்றும் ஆதார் மையங்கள் நாளை (டிச.31) மற்றும் புத்தாண்டு தினமான ஜன.1 ஆகிய தேதிகளில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வருட இறுதி மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்த 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்கு பிறகு, வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் அனைத்து மையங்களும் வழக்கம்போல் செயல்படும் என நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.