மகாராஷ்டிராவின் நாக்பூர்-ராய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், பிம்பல்கான் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெட்ரோல் பங்க்கில் இருந்து நெடுஞ்சாலைக்கு வந்த லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக வந்த பொலிரோ வாகனம் பயங்கரமாக மோதியதில் வாகனம் சுக்குநூறானது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.