மகாராஷ்டிராவின் நான்டெட், ஹிங்கோலி மற்றும் பர்பானி ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜூலை 9) அதிகாலையில் 4.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நில அதிர்வு தொடர்பான CCTV காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அம்மாநிலத்தில் ஏற்கனவே பெய்து வரும் கனமழையால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த திடீர் நில அதிர்வு மக்களிடையே மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.