விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் வீடுகளுக்குள் இருந்த மக்கள் அனைவரும் வெளியே அலறியடித்து ஓடினர். சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிர்வை உணர்ந்துள்ளனர். இந்நிலையில், இந்த நிலநடுக்கம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவலோ சேதாரங்கள் குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை.