புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆண்டோ ஜோசப் என்பவர் நடத்திவரும் உணவகத்தில், 50 பரோட்டா சாப்பிட்டால் ரூ.5,001 பரிசாக வழங்கப்படுவதாக அறிவித்தார். இந்த நிலையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 40-க்கும் மேற்பட்டோர் இந்த போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில், முத்து என்பவர் திக்கித் திணறி 40 பரோட்டாக்கள் வரை சாப்பிட்டார். இருந்தபோதிலும், இந்த போட்டியில் யாரும் வெற்றிப் பெறவில்லை. இந்த போட்டி தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.