விரத காலங்களில் உடல் சோர்வடையாமல் இருக்கவும், நீர்ச்சத்தை தக்கவைக்கவும் தர்பூசணி, ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற நீர்ச்சத்து மிகுந்த பழங்களை உணவில் சேர்த்து கொள்வது சிறந்தது. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உடனடி ஆற்றலை வழங்குவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கவும், தசைகள் சோர்வடையாமல் தடுக்கவும் உதவுகிறது. வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடும்போது அவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் துணையாக நிற்கின்றன.