ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய் மீண்டும் தீவிரமாகப் பரவி, இதுவரை 65 பேரின் உயிரைப் பறித்துள்ளது. 1976 முதல் தற்போது 17-வது முறையாகப் பரவி வரும் இந்த கொடூர நோயால், இடூரி மாகாணத்தில் 246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எளிதில் பரவக்கூடிய இந்நோயைக் கட்டுப்படுத்த மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.