மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய் மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், தொற்று பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 999-ஐ எட்டியுள்ளது. நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் காங்கோ சுகாதாரத் துறை திணறி வரும் சூழலில், அங்கு இதுவரை 2,473 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வாந்தி மற்றும் ரத்தம் போன்ற உடல் திரவங்கள் மூலம் எளிதில் பரவும் இந்த கொடிய வைரஸைக் கட்டுப்படுத்த
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் விமானப்
போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.