உகாண்டா நாட்டில் இருந்து பெங்களூரு வந்துள்ள ஒரு பெண்ணுக்கு எபோலா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான ஆய்வக அறிக்கை எதிர்மறையாக வந்துள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெளிவுபடுத்தியுள்ளார். சந்தேகிக்கப்படும் பெண் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அப்பெண்ணுக்கு எந்தவிதமான நோய்த்தொற்றும் இல்லை என சுகாதாரத் துறையின் சிறப்பு மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.