காங்கோ, உகண்டா போன்ற நாடுகளில் எபோலா வைரஸ் பரவல் காரணமாக, அந்த நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், எபோலா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு மற்றும் முகக் கவசம் கட்டாயம் என சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என தமிழக பொது சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. கடந்த 2019ல் கொரோனா தொற்றுக்கு மட்டுமே முகக் கவசம் அணிய உத்தரவிடப்பட்டது என்றும், எபோலா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்படவில்லை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.