எஸ்.பி வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்ய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று (மே.11) எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி எடுத்தபோது சிலர் மட்டுமே மேஜையைத் தட்டினர். ஆனால், எஸ்.பி வேலுமணி உறுதிமொழி எடுத்தபோது அதிமுகவைச் சேர்ந்த பலரும் மேஜையைத் தட்டி உற்சாகமாக வரவேற்றனர். இதன் மூலம் அதிமுக இரண்டாக பிரிந்திருப்பது உறுதியாகியுள்ளது.