மலையாள நடிகரின் சொத்துகளை முடக்கிய ED

3582பார்த்தது
மலையாள நடிகரின் சொத்துகளை முடக்கிய ED
பொதுமக்களை ஏமாற்றி பணம் மோசடி செய்ததன் காரணமாக மலையாள நடிகரின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் ஜெயசூர்யா, ஆன்லைன் ஏல மோசடி வழக்கில் சிக்கினார். இதன் காரணமாக அவரது ரூ.39 லட்சம் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதாக தெரிகிறது. தொடர்ந்து, இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவர், ‘வசூல் ராஜா MSSS', 'என் மன வானில்' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த‌வர்.

தொடர்புடைய செய்தி