2011-16 அதிமுக ஆட்சியில்
போக்குவரத்து துறையில்
வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அவர் முந்தைய
திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்ததால் இதுவரை இந்த விசாரணைக்கு அனுமதி கிடைக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த கடிதம் மூலம் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை தனது அடுத்தகட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.