எடப்பாடி பழனிசாமி முரட்டு அடிமை ஆகிவிட்டார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விருதுநகரில் இன்று (பிப்., 07) நடைபெற்று வரும் இளைஞரணி மாநாட்டில் பேசிய அவர், 'மோடி, அமித்ஷா கால்களை பார்த்தபடி சென்றால் முட்டுச் சந்துதான் வரும். இந்தியாவில் எடப்பாடி பழனிசாமி முரட்டு அடிமை ஆகிவிட்டார். மக்களை நாம் தைரியமாக சந்திக்கிறோம். வெற்றுக் கூச்சல் போடும் கூட்டத்தால் எந்த பலனும் இல்லை' என தவெகவை மறைமுகைமாக சாடினார்.