அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பதிவில், “இந்தியத் திருநாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ள மாண்புமிகு ஆளுநர் திரு.
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகள். பாஜக மூத்த தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் திறம்படப் பணியாற்றிய அவர்தம் பொதுவாழ்விற்கும், தொடர் அர்ப்பணிப்போடு அவராற்றிய மக்கள் சேவைக்கும், இப்பதவி மிகச் சிறந்த அங்கீகாரம்” என்றார்.