கேரள மாநில புதிய முதல்வராக வி.டி.சதீசன் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் ஐயுஎம்எல் கட்சியின் 5 பேரும், கூட்டணிக் கட்சிகளின் 4 பேரும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். இவ்விழாவில் ராகுல் காந்தி, கார்கே மற்றும் காங்கிரஸ் முதல்வர்கள் பங்கேற்றனர். புதிய முதல்வர் சதீசனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.