கேரளாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள வி.டி.சதீசனுக்க
ு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் பதவியேற்றுள்ள அவருக்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தனது சார்பிலும் அனைத்திந்திய அதிமுக சார்பிலும் பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.