பீகாரில் 10வது முறை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிதிஷ்குமாருக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், 'பீகாரில் இன்று பதவியேற்றுள்ள நிதிஷ்குமார், என்டிஏ கூட்டணிக்கு வாழ்த்துகள். இந்த அங்கீகாரம் மக்களின் நம்பிக்கையையும், தொடர்ச்சியான நிலைத்தன்மை, வளர்ச்சிக்கான அவர்களின் விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது. நல்லாட்சி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சியை வழங்க வாழ்த்துகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.