அதிமுக கூட்டணியில் தமமுகவுக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டதால், நடிகையும், அதிமுக பிரமுகருமான கௌதமி அதிருப்தி அடைந்துள்ளார். கௌதமிக்கு ராஜபாளையம் தொகுதியை ஒதுக்குவதாக எடப்பாடி வாக்குறுதி அளித்திருந்ததாகவும், அதற்காக அவர் பல லட்சங்களை செலவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தொகுதி வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த கௌதமி, இபிஎஸ்-ஐ தொடர்பு கொள்ள முயன்றும் பலனளிக்கவில்லையாம். ராஜபாளையத்தில் தமமுக தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.