சென்னை கொளத்தூரில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்ட அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை திறந்து வைத்து மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது, “என்னை நினைத்து நானே பெருமைக்கொள்ளும் நாள் இது. மாணவர்களுக்கு நான் சொல்லுவது ஒன்றுதான். கல்விதான் கடவுள், கல்வி எனும் கடவுள் உங்களுக்கு எல்லாவற்றையும் வழங்கும்” என்றார்.