கல்வியாளர் முனைவர் எஸ்.எஸ். ராஜகோபாலன் காலமானார்

105பார்த்தது
கல்வியாளர் முனைவர் எஸ்.எஸ். ராஜகோபாலன் காலமானார்
கல்வியாளர் முனைவர் எஸ்.எஸ். ராஜகோபாலன் (95) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (பிப்.3) இரவு காலமானார். சென்னை கோடம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் காலமானார். அவரது உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.