தமிழ்நாட்டில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு அனுப்பிய 3 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 12 நாட்களாக துறைமுகங்களிலும், கப்பல்களிலும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் காரணமாக, கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. முன்னதாக கப்பலில் அனுப்பிய முட்டைகள், சென்று சேராமல் காலாவதியாகும் அபாயம் உள்ளதால், நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.