நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 20 காசுகள் குறைப்பு

4119பார்த்தது
நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 20 காசுகள் குறைப்பு
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக்கூட்டத்தில், முட்டை கொள்முதல் விலையை 20 காசுகள் குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி, நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை மேலும் 20 காசுகள் குறைக்கப்பட்டு 5 ரூபாய் 60 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 80 காசுகள் சரிவடைந்துள்ளதால் கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி