நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நேற்று (நவ., 07) கூடியது. இந்த கூட்டத்தில், முட்டை உற்பத்தி மற்றும் மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இந்த நிலையில், 550 காசுகளுக்கு விற்ற முட்டை விலை ஐந்து காசு உயர்த்தப்பட்டு, 555 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் கொள்முதல் விலை 15 காசு உயர்ந்துள்ளது. மேலும், 1 கிலோ முட்டைக்கோழி ரூ.106 ஆகவும், 1 கிலோ கறிக்கோழி ரூ.106 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.