நாமக்கல் மண்டலத்தில் தினசரி 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாமக்கல்லில் நேற்று (நவ., 14) நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டை கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்தி, 590 காசுகளாக நிர்ணயித்துள்ளனர். இதனால், நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.90 ஆக உயர்ந்துள்ளது. முட்டை கடந்த ஒரு வாரத்தில் 35 காசுகள் விலை அதிகரித்துள்ளது. கடந்த 4ஆம் தேதி 5.40 காசுக்கு விற்கப்பட்ட முட்டை கடந்த 11 நாட்களில் 55 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.