முட்டை விலை 6 நாட்களில் 80 காசுகள் உயர்வு.. ரூ.6.50 ஆக நிர்ணயம்

4பார்த்தது
முட்டை விலை 6 நாட்களில் 80 காசுகள் உயர்வு.. ரூ.6.50 ஆக நிர்ணயம்
தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் முட்டையின் நுகர்வு அதிகரித்து வருவதால் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை மேலும் 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.6.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் முட்டை விலை 80 காசுகள் அதிகரித்துள்ளது. இதனால் நுகர்வோர் கூடுதல் விலை கொடுத்து முட்டைகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முட்டை விலை உயர்வு பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி