நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ஒரு முட்டை ரூ.5.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. இதன் எதிரொலியாக சென்னையில் ஒரு முட்டையின் சில்லறை விலை ரூ.6 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு பொதுமக்கள் மற்றும் சிறிய உணவக உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.