புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழையால் தொழிற்சாலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 80 வயது முதியவர் உயிரிழந்தார். மேலும், 2 பெண்கள் படுகாயமடைந்தனர். சுமார் 25 அடி நீளமும், 15 அடி உயரமும் கொண்ட சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்புப் படையினர் மீட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.