தேர்தல் நடத்தை விதிகள்.. ரூ. 35 லட்சம் பறிமுதல்

15பார்த்தது
தேர்தல் நடத்தை விதிகள்.. ரூ. 35 லட்சம் பறிமுதல்
தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதியை நேற்று மாலை 4 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் அவினாசி சாலையில் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு வாகனத்தில் எடுத்துவரப்பட்ட ரூ.35 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, உரிய ஆவணங்களை சமர்பிக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி