தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நேற்று (மார்ச் 15) முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விதிகளின்படி, முறைகேடுகளை கண்காணிக்க 24 அமலாக்க முகமைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க மாவட்ட அதிகாரிகளுக்குக் கடும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.