தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பு: ரவிக்குமார்

0பார்த்தது
தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பு: ரவிக்குமார்
தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாகவே மாறிவிட்டது என்று திண்டிவனத்தில் இன்று (அக்.11) நடைபெற்ற நிகழ்ச்சியில் விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் நடவடிக்கைகளால் நாட்டில் உள்ள சுமார் 13 கோடி வாக்காளர்களின் அடிப்படை வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் இன்றைக்கு என்ன நிலையை அடைந்துள்ளன என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி