தேர்தல் ஆணையத்தின் சதி தற்போது அம்பலமாகிவிட்டது என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். பீகார் தேர்தல் முடிவுகள் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு சாதகமாக வந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அகிலேஷ், பாஜக என்பது கட்சியல்ல, அதுவொரு மோசடி. பீகாரில் நடந்த SIR விளையாட்டு, தமிழ்நாடு, மேற்குவங்கம், உத்தரப்பிரதேசத்தில் எடுபடாது என்று தெரிவித்துள்ளார்.