தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், சென்னையில் இன்று (பிப்.26) தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான 7 பேர் குழு சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்துகிறது. மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.