தேர்தல் தோல்வி.. 10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

6139பார்த்தது
தேர்தல் தோல்வி.. 10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை
விருதுநகர் மாவட்டம், கட்டனூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்தவர் ஷாலினி. இவர், 10 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்த நிலையில் இன்று (மே.20) தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் ஷாலினி கணித பாடத்தில் மட்டும் 26 மதிப்பெண் பெற்று தோல்வியடைந்துள்ளார். இதில் மனமுடைந்த ஷாலினி வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி