ரூ.126.64 கோடி பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை

5629பார்த்தது
ரூ.126.64 கோடி பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பறக்கும் படையின் சோதனைகள், அனைத்து தொகுதிகளிலும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்நாடு தேர்தல் ஆணைய அதிகாரிகளின் தகவலின்படி, தேர்தல் காலத்தில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், நகைகள், மதுபானங்கள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.900 கோடியைத் தாண்டியுள்ளது. இதில், ரூ.126.64 கோடி ரொக்கம் ஆவணங்கள் இன்றி பிடிபட்டுள்ளதாக கூறப்படுகிறது.