தவெகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வரும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்தார். சேலத்தில் இன்று (பிப்., 13) மக்கள் சந்திப்பில் பேசிய அவர், உங்களை நான் எப்போதும் ஏமாற்ற மாட்டேன். தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. அதில் அனைத்து அம்சங்களும் இடம்பெறும். பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது யார்? மக்கள் விரோத திமுக அரசை எதிர்ப்பதே முதன்மை. மக்கள் பலமுறை நிராகரித்தவர்களை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் என்று அதிமுகவை மறைமுகமாக விமர்சித்தார்.