நெருங்கும் தேர்தல்.. தமிழ்நாட்டிற்கு வருகை தரும் தலைமை தேர்தல் ஆணையர்

6பார்த்தது
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தமிழ்நாடு வரவுள்ளார். பிப்.26, 27ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். அனைத்து கட்சி நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுடன் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடப்பதாக கூறப்படுகிறது. 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி