தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய பொறுப்பாளர்களின் பதவி காலம் வருகின்ற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில், 2026-29 ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல், இன்று (பிப்.22) சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்று வருகிறது. அங்கு பேசிய நடிகை குஷ்பு, “சினிமாவுக்கு தேர்தல் மிகவும் முக்கியம். தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் தமிழ் சினிமா நன்றாக இருக்கும்” என்றார்.